மத்தளை விமான நிலைய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா தௌிவூட்டல்

மத்தளை விமான நிலைய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா தௌிவூட்டல்

மத்தளை விமான நிலைய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் நிமல் சிறிபால டி சில்வா தௌிவூட்டல்

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2018 | 8:14 pm

Colombo (News 1st)  மத்தளை விமான நிலையத்தின் உரிமத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தௌிவுபடுத்தினார்.

மத்தளை விமான நிலையத்தை ஒரு கூட்டு வர்த்தக அடிப்படையில் அபிவிருத்தி செய்யவே இந்தியன் விமான சேவை நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா விளக்கமளித்தார்.

கூட்டு வியாபாரமாக இதனை உருவாக்கி, 70 வீதத்தை இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணம் மூலம் நாட்டின் அதிகளவிலான கடன்களை செலுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

எவ்வாறாயினும், இராணுவ செயற்பாடுகளுக்கு மத்தளை விமான நிலையத்தை பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லை என நிமல் சிறிபால டி சில்வா உறுதியளித்தார்.

மேலும், இலங்கையின் சிவில் விமான சேவை சட்டத்தின் படி அதிக பங்குகளை வௌிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர், சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு பாராளுமன்ற அனுமதியைப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே, மத்தளை விமான நிலையம் தொடர்பான உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்