புதன்கிழமை பதிவாகிய பரபரப்பான செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய பரபரப்பான செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய பரபரப்பான செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Jul, 2018 | 6:34 am

Colombo (News 1st)

உள்ளூர் செய்திகள்

01. மத்திய வங்கி முறிகள் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பாலிசேன ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

02. Bestweb 2018 விருது வழங்கும் விழாவில் சிறந்த ஊடக இணையத்தளத்திற்கான தங்கவிருது Newsfirst க்கு வழங்கப்பட்டது.

செய்தி நிறுவனமொன்றின் இணையத்தளமொன்று அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த இணையத்தளத்திற்கான விருதினைப் பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

03. சாட்சியங்களுக்கு அமைய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டமை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மேல்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மரணதண்டனை விதித்ததாக சட்ட மா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

04. நாட்டினை ஒரு புதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதிய அரசியல் யாப்பானது, இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

05. ETI நிறுவன பணிப்பாளர் சபையின் 4 பேருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பயணத் தடை காலவரையறையின்றி மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

06. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடி கருத்தரங்குகள் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டுச் செய்திகள்

01. வட கொரியாவின் அணுவாயுதக் களைவிற்கு கால அவகாசம் இல்லை எனக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த செயன்முறையை விரைவுபடுத்தவேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

02. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் தனது பறக்கும் கார் திட்டத்தை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வீதிப் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் நேர விரயம் செய்வதாகவும் மாறிவருவதால், பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், தற்போது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

01. இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ், பங்களாதேஷின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

02. இந்தியாவிற்கு எதிராக இரண்டு சதங்களைப் பெற்ற ஜோ ரூட், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்