எரிபொருள் விநியோகிக்கும் தனியார் கொள்கலன் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

எரிபொருள் விநியோகிக்கும் தனியார் கொள்கலன் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

எரிபொருள் விநியோகிக்கும் தனியார் கொள்கலன் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2018 | 4:53 pm

Colombo (News 1st)  எரிபொருள் விநியோகிக்கும் தனியார் கொள்கலன் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க பெட்ரோலிய வள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் கீழ் திறன் அடிப்படையில் 12.43 சதம், 16.43 சதம் மற்றும் 20 ரூபாவினால் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்