எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரத்தைக் கோரி சபாநாயகருக்கு கடிதம்

எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரத்தைக் கோரி சபாநாயகருக்கு கடிதம்

எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரத்தைக் கோரி சபாநாயகருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2018 | 8:03 am

Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரத்தைத் தமக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் நேற்று கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கூறியுள்ளார்.

இதன்போது, தமது கோரிக்கை தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் கூறியதாகவும் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் 70 பேரின் கையொப்பத்துடன் தமது கோரிக்கை கடிதத்தை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்