Colombo (News 1st) Bestweb 2018 விருது வழங்கும் விழாவில் சிறந்த ஊடக இணையத்தளத்திற்கான தங்கவிருது Newsfirst க்கு வழங்கப்பட்டது.
செய்தி நிறுவனமொன்றின் இணையத்தளமொன்று அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த இணையத்தளத்திற்கான விருதினைப் பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அத்துடன், சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இணையத்தளத்திற்கான தங்கவிருதும் Newsfirst.lk விற்கு கிடைத்தது.
கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் Bestweb 2018 விருது வழங்கும் விழாவின்போதே இந்த விருதுகள் கிடைத்துள்ளன.
இந்த நிகழ்வு இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் தலைவர் ரொஹான் சமரஜீவவின் தலைமையில் நடைபெற்றது.