ETI பணிப்பாளர் சபைக்கான பயணத்தடை மீண்டும் நீடிப்பு

ETI பணிப்பாளர் சபைக்கான பயணத்தடை மீண்டும் நீடிப்பு

ETI பணிப்பாளர் சபைக்கான பயணத்தடை மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2018 | 3:14 pm

Colombo (News 1st) ETI நிறுவன பணிப்பாளர் சபையின் 4 பேருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பயணத் தடை காலவரையறையின்றி மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஜீவக, நாளக்க, தீபா மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டுப் பயணத்தடையை காலவரையறையின்றி நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய ஜீவக எதிரிசிங்க உள்ளிட்ட 4 பணிப்பாளர்களும் இன்று மன்றில் ஆஜராகினர்.

ETI நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, குறித்த 4 பேருக்கும் ஏற்கனவே நீதவானால் வௌிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி தவிர்ந்த ஏனைய நிதி நிறுவனங்களின் பணிப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2011ஆம் ஆண்டு முதல் நிதிச் சட்டங்களுக்கு முரணான வகையில் ஈ.டீ.ஐ. நிறுவனம் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, 33 பில்லியன் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்