அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர்

அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர்

by Staff Writer 18-07-2018 | 2:26 PM
Colombo (News 1st) அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிப்பதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறேபந்து ருவன் பத்திரன தெரிவித்துள்ளார். அவர்களுள் 50,000 பேருக்கு இந்த வருட இறுதிக்குள் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இதற்கான சில ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிறேபந்து ருவன் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.