பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை

பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை

பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2018 | 3:42 pm

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமான பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.

திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் பொலிஸார், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்