பறக்கும் காரை அறிமுகம் செய்யவுள்ள ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம்

பறக்கும் காரை அறிமுகம் செய்யவுள்ள ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம்

பறக்கும் காரை அறிமுகம் செய்யவுள்ள ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2018 | 3:23 pm

உலகம் முழுவதும் வீதிப் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் நேர விரயம் செய்வதாகவும் மாறிவருவதால், பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் தனது பறக்கும் கார் திட்டத்தை அறிவித்துள்ளது.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ், ஹெலிகாப்டரை போன்று செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கும் (EVTOL) மற்றும் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வேகத்தில் நான்கு அல்லது ஐந்து பேரை சுமந்துகொண்டு தொடர்ந்து 800 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் கார் ஒன்றைத் தயாரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் இந்த காரை எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இது தனிப்பட்ட, வர்த்தக, சரக்கு மற்றும் இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்குமென்று கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்