பரீட்சை முன்னோடி கருத்தரங்களை நிறைவுசெய்ய காலக்கெடு

பரீட்சை முன்னோடி கருத்தரங்களை நிறைவுசெய்ய காலக்கெடு

பரீட்சை முன்னோடி கருத்தரங்களை நிறைவுசெய்ய காலக்கெடு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2018 | 2:55 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடி கருத்தரங்குகள் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவின் பின்னர், எந்தவொரு நபரும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கோ அல்லது அச்சிடப்பட்ட குறிப்புகளை வழற்குவதற்கோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வருட உயர்தரப் பரீட்சைக்காக 321469 மாணவர்கள் தோற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது மற்றும் அச்சிடப்பட்ட பிரதிகளை வழங்குவது, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்