இரண்டு சதங்களைப் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஜோ ரூட்

இரண்டு சதங்களைப் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஜோ ரூட்

இரண்டு சதங்களைப் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஜோ ரூட்

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2018 | 4:08 pm

இந்தியாவிற்கு எதிராக இரண்டு சதங்களைப் பெற்ற ஜோ ரூட், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (17) இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

முதல் போட்டியில் சரிவர விளையாடாத ஜோ ரூட் 2 ஆவது மற்றும் 3 ஆவது போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களைப் பெற்றார்.

இந்த தொடரில் 216 ஓட்டங்களைக் குவித்தார். இரண்டு போட்டியில் நாட்அவுட் என்பதால் சராசரி 216 ஆகும். இதன்மூலம் 818 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் இருந்து 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 75, 45 மற்றும் 71 ஓட்டங்களை அடித்தார். அவரின் சராசரி 63.66 ஆகும். இதன்மூலம் முதன்முறையாக ஒருநாள் தொடரில் 911 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3 ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார். ஓராண்டு தடை பெற்றுள்ள வார்னர் 5 ஆவது இடத்திற்கும் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 6 ஆவது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர்.

இந்தியாவின் ரோஹித் சர்மா 4 ஆவது இடத்தில் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்