பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் வைரங்கள்

பூமிக்கு அடியில் படிமங்களாகப் புதைந்து கிடக்கும் பல கோடி வைரங்கள்

by Bella Dalima 17-07-2018 | 4:26 PM
பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் பல இலட்சம் கோடி வைரங்கள் புதைந்து கிடப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாகப் புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை மலைகள் போன்றும், குன்றுகள் போன்றும் தென்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பல இலட்சம் தொன் எடையுள்ள வைரங்கள் பாறை படிமங்களாகக் கிடக்கின்றன. ஆனால் அவற்றை துளையிட்டோ, வெட்டியோ எடுக்க முடியாது. காரணம் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 150 மைல் ஆழத்தில் உள்ளன. இந்த தகவல் ஜியோ இரசாயனம் ஜியோ இயற்பியல் உள்ளிட்ட அறிவியல் இதழ்களில் வெளியாகியுள்ளன.