திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை இடம்பெற்ற பரபரப்பான செய்திகள்

by Chandrasekaram Chandravadani 17-07-2018 | 6:14 AM
Colombo (News 1st)  உள்ளூர் செய்திகள் 01. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 02. கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் மக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுத்தை செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட ஒன்றென்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலில் வழமைக்கு மாறாக கொழுப்புப் படிந்திருந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 03. தற்போது காணப்படும் காடுகளின் அடர்த்தியை 32 வீதம் வரை அதிகரிப்பதற்காக இலங்கை அரசு அரப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 04. பேலியகொட 4ஆம் கட்டை பகுதியில் கொங்கல்கொடபண்டா மாவத்தையில் உள்ள 7 வீடுகளில் நேற்று (16) தீ பரவியது. 05. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (16) அனுமதி வழங்கியது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த அனுமதியை வழங்கினார். 06. அங்குருவாதொட்ட - தொடம்கொட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வேரவத்த பகுதியிலுள்ள தங்குமிடமொன்றில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வௌிநாட்டுச் செய்தி 01. பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் தனக்குத் தென்படவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகிய மூவருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கு மேலதிகமாக 4 சர்வதேச ஒருநாள் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்