by Staff Writer 17-07-2018 | 4:11 PM
Colombo (News 1st) எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே.அமிலவிற்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 30,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் எம்பிலிப்பிட்டிய பிரதம நீதவான் எச்.ஐ.கே. காஹிங்கல உத்தரவிட்டுள்ளார்.
3000 ரூபா மேலதிகமாக அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை 9 மாதங்கள் குறைத்து பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.