18 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் இலங்கையர் இருவர் கைது

18 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் இலங்கையர் இருவர் கைது

18 மில்லியன் பெறுமதியுடைய தங்கத்துடன் இலங்கையர் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2018 | 4:13 pm

Colombo (News 1st) நாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த இலங்கைப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 18 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 29 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை 2 கிலோகிராம் 900 கிராம் நிறையுடையவை எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்