ட்ரம்ப் - புட்டின் சந்திப்பு

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையை நம்புவதற்கு எந்தக் காரணமும் தென்படவில்லை - ட்ரம்ப்

by Chandrasekaram Chandravadani 16-07-2018 | 10:21 PM
பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டமையை நம்புவதற்கு எந்தவொரு காரணமும் தனக்குத் தென்படவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், புட்டினுடனான சந்திப்பு நல்லதொரு ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இது கடினமான பல தேசிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான நேரம் குறித்த சந்திப்பிற்கு முன்னர் புட்டின் கூறியிருந்தார். அதேநேரம், புட்டினுடனான சந்திப்பிற்கு முன்னர், உச்சிமாநாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே அசாதாரணமான உறவு ஏற்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், முன்னைய நிர்வாகங்களில் அமெரிக்க - ரஷ்யாவிற்கு இடையே பதற்றம் இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். 2016ஆம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.