சீரற்ற வானிலையால் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு வலியுறுத்தல்

சீரற்ற வானிலையால் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு வலியுறுத்தல்

சீரற்ற வானிலையால் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2018 | 12:37 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளை அவதானமாக பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வாகனங்களின் முன்புறமுள்ள விளக்குகளை ஔிரச்செய்து பயணிக்குமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 5 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் வாகனம், பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதற்கு பின்னால் வந்த 3 கார்களும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்