அனுமதிப்பத்திரமின்றேல் விளைவு பாரதூரமானது

அனுமதிப்பத்திரமின்றேல் விளைவு பாரதூரமானது

by Staff Writer 15-07-2018 | 5:28 PM

அனுமதிப்பத்திரமின்றி கனிய வளங்களைக் கொண்டு செல்லும் டிப்பர் வாகனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கனிய பொருட்களைக் கொண்டுசெல்லும் டிப்பர் வாகனங்கள், பதிவு செய்திருத்தல் அவசியம் என பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன டி சில்வா கூறியுள்ளார். டிப்பர் வாகனங்களை அடையாளங் காண்பதற்காக, ஜி.பி.எஸ். தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் தொடர்பாடல் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்மூலம் கனிய வளங்களை ஏற்றிய வாகனங்கள், பயணத்தை ஆரம்பித்தது முதல், உரிய வகையில் பயணிக்கின்றதா என்பது தொடர்பில் கண்டறிய முடியும். கனிய வளங்களைக் கொண்டுசெல்வதற்கு இதுவரை 5,000க்கும் அதிகமான டிப்பர் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.