மரணதண்டனை விதிக்கப்பட்டோரில் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர்!

மரணதண்டனை விதிக்கப்பட்டோரில் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர்!

மரணதண்டனை விதிக்கப்பட்டோரில் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர்!

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2018 | 6:00 pm

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களில் பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பாகிஸ்தான் பிரஜைகள் உள்ளிட்ட மரணதண்டனை கைதிகள் 18 பேரின் பெயர் விபரங்கள் கடந்த வௌ்ளிக்கிழமை நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சிறைச் சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்துவரும் நிலையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள
சிறைக்கைதிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அலுக்கோசு பதவிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்