உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் மண்டியிட்டது குரோஷியா !

உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் மண்டியிட்டது குரோஷியா !

உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் மண்டியிட்டது குரோஷியா !

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2018 | 10:11 pm

சற்றுமுன்னர் முடிவடைந்த உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 04 கோல்களைப் பெற்று, 4 – 2 என்ற கணக்கில் சம்பியனாகியுள்ளது. மறுமுனையில் குரோஷிய அணி 2 கோல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது (UPDATE)

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் 4 – 2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் 2ஆவது தடவையாகவும் சம்பியனானது.

மொஸ்கோவின் லுஸ்ஹினி மைதானத்தில் 75,000 ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் ​போட்டியில் 18 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணித்தலைவரான அன்டோன்கியோ
கிரிஸ்மனுக்கு OWN GOAL வாய்ப்பொன்று கிடைத்தது.

அதனை அவர் கோலாக மாற்றினார்.

சளைக்காத குரோஷிய வீரர்கள் போட்டியின் 28ஆவது நிமிடத்தில் குரோஷிய அணியின் இவான் பெரிசிக் தனது அணிக்கு முதல் கோலை ஈட்டிக்கொடுத்தார்.

தொடர்ந்தும் பிரான்ஸ் வீரர்கள் கோலடிக்க போராடியதோடு 38 ஆவது நிமிடத்தில் அன்டோன்கியோ கிரிஸ்மனுக்கு பெனால்ட்டி வாய்ப்பொன்று கிடைத்தது.

அதனை அவர் கோலாக மாற்றியதோடு பிரான்ஸ் அணியை 2 – 1 என்ற ​கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை பெறச் செய்தார்.

20 வருடங்களுக்கு பிறகு உலகக்கிண்ணத்தை மீண்டும் வெல்லும் எதிர்பார்ப்பில் பிரான்ஸூம் வரலாற்றில் முதல்தடவையாக சம்பியன் கிண்ணத்தை வென்று உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முயற்சியில் குரோஷியாவும் களம் கண்டிருந்தன.

உலக மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை நேரப்படி இரவு 08.30க்கு ஆரம்பமாகியது.

ரஷ்யாவில் நடைபெறும் 21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் தரவரிசையில் முன்னணியில் நீடித்த அணிகளுக்கு தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகின் இரண்டாவது மிகச்சிறிய நாடான குரோஷியாவை புகழின் உச்சிக்கு இட்டுச்சென்ற லூகா மொட்ரிக் தலைமையிலான குரோஷிய அணி , ஆர்ஜென்டினா, ஐஸ்லாந்து மற்றும் நைஜீரியா, டென்மார்க் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியே இறுதிப் ​போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த குரோஷியா இன்று அதே அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது.

2006 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கால்பந்தாட்டத்தொடரில், இத்தாலி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் இரண்டாமிடத்தை அப்போது பிடித்தது.

என்றாலும், 1998 ஆம் ஆண்டு உலக சம்பியனாக மகுடம் சூடிய பிரான்ஸ் அணி இவ்வருடம் மூன்றாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அவுஸ்திரேலியா, பெரு, ஆர்ஜென்டினா, உருகுவே மற்றும் பெல்ஜியம் அணிகளை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

32 அணிகள், 8 குழுக்களின் கீழ் இடம்பெற்று வரும் 21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் சம்பியன் பட்டத்தை  இறுதியில் பிரான்ஸ் தன் வசமாக்கியது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்