by Staff Writer 15-07-2018 | 6:51 AM
Colombo (News 1st) கொழும்பை அண்மித்துள்ள சில பகுதிகளில் இன்று காலை 8 மணிமுதல், 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பேலியகொட, களனி உள்ளிட்ட பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
வத்தளை நகரசபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பியகம, மஹர, தொம்பே, ஜா - எல மற்றும் கம்பஹா ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதுதவிர ஜா - எல நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கட்டுநாயக்க, சீதுவ நகரசபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று காலை 8 மணிமுதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, திருத்தப் பணிகள் காரணமாக, வட மாகாணம் முழுவதும் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடைப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.