காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில்

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில்

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2018 | 9:32 pm

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான சந்திப்பு, இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலக பிரதிநிதிகளுக்கும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள், கிராமசேவகர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகள் ஆகியோருக்கு இடையில் தனித்தனியே இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், கூட்டுறவு சபையை முற்றுகையிட்டு கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் எமக்குத் தேவையில்லை, அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச பொறிமுறையே எமக்கு வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பொலிஸார், இடையூறு விளைவிக்காத நிலையில் போராட்டத்தை முன்னெடுக்குமாரு தெரிவித்தனர்.

அதனையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களில் ஒரு பகுதியினர்
மண்டபத்திற்குள் சென்ற நிலையில், மற்றுமொரு பகுதியினர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்