அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2018 | 5:44 pm

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு கூளாவடி பிரதேசத்தை
அண்டிய பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று அக்கரைப்பற்று நீதவான் ஏ. பீட்டர்போல் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விடயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் இணைந்தவகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் கோளாவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்