பேக்கரி உற்பத்திகளின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

by Bella Dalima 14-07-2018 | 10:33 PM
Colombo (News 1st)  பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை நாளை (15) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. தமக்கான நிவாரணங்கள் வழங்கப்படாத பட்சத்தில் பாணின் விலையையும் அதிகரிக்க நேரிடும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட நிதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அதற்கான சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.