ஊடக நிறுவனத்தை கைப்பற்ற முயலும் வௌிநாட்டவர் யார்?

ETI வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்காமல் ஊடக நிறுவனத்தை கைப்பற்ற முயலும் வௌிநாட்டவர்கள் யார்?

by Staff Writer 13-07-2018 | 8:28 PM
Colombo (News 1st)  EAP குழுமத்திற்கான ETI நிதி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அதன் நிதி வைப்பாளர்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பணத்தினைக் கோரி வீதிக்கு இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் புதிய முதலீட்டாளரைக் கண்டுபிடித்ததன் பின்னர் வைப்பாளர்களின் பணத்தினை வழங்குவதாக அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம், முதலீட்டாளர்கள் வருகை தந்ததாகவும் 75 மில்லியன் டொலர் முதலீட்டினை கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதுவரை 32 மில்லியன் டொலர் முதலீடுகளே கிடைத்துள்ளன. அந்த நிதியினை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பயன்படுத்தாமல், ETI நிறுவனம் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளரின் 32 மில்லியன் டொலர் நிதி. EAP ஜூவலர்ஸ் மற்றும் தியேட்டர்ஸ் நிறுவனங்களுக்கும் EAP ஊடக நிறுவனத்திற்கும் (40 வீதம்) முதலிடப்பட்டுள்ளது. EAP ஊடக நிறுவனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையின் 6 பேரில் நால்வர் வௌிநாட்டவராவர். Omar Qandeel, Don Cyril Rodrigo, Paul Xavier மற்றும் Thomas Mathew ஆகியோரே அந்த நால்வராவர். பணிப்பாளர்களுக்கு மாற்றக்கூடிய 40 வீத பங்குகளுக்கு இரு தலைவர்களுக்கு பதிலாக 4 வௌிநாட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிந்துள்ளதா? அவ்வாறெனில், எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்?