டுவிட்டரில் 70 இலட்சம் போலி கணக்குகள் முடக்கம்

டுவிட்டரில் 70 இலட்சம் போலி கணக்குகள் முடக்கம்: பிரபலங்களின் பின்தொடர்வோர் எண்ணிக்கை சரிவு

by Bella Dalima 13-07-2018 | 5:14 PM
சமூக வலைத்தளங்களில் புரளிகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக டுவிட்டரில் போலியான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் கடத்தல், நோய், பேரிடர் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக போலியான டுவிட்டர் கணக்குகள் மூலம் பரவும் புரளிகளால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், போலிக்கணக்குகளை நீக்கும் நடவடிக்கையை டுவிட்டர் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சுமார் 70 இலட்சம் போலிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பல முக்கிய தலைவர்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளது. போலியான டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் வரை குறைவடைந்துள்ளது. இதேபோல், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை சுமார் 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளது. இதனால், டுவிட்டரில் அதிக பின்தொடர்வோரைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் இலேசான தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.