ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபட்ட மற்றும் யாசகம் கோரிய 15 பேர் கைது

ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபட்ட மற்றும் யாசகம் கோரிய 15 பேர் கைது

ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபட்ட மற்றும் யாசகம் கோரிய 15 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

13 Jul, 2018 | 3:53 pm

Colombo (News 1st)  ரயில்களில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் யாசகம் கோரியமைக்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபடல், யாசகம் கோரல் போன்ற செயற்பாடுகள் கடந்த முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான முறைப்பாடுகளை 011 2 33 66 14 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்