பதுளையில் காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் பாதுகாப்பாக மீட்பு

பதுளையில் காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் பாதுகாப்பாக மீட்பு

பதுளையில் காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் பாதுகாப்பாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2018 | 4:47 pm

Colombo (News 1st)  பதுளை – ஹல்துமுல்ல, வங்கெடிகல மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டிருந்த 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

10 பேர் கொண்ட குழுவொன்றே காட்டுத்தீயில் சிக்குண்டிருந்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார குறிப்பிட்டார்.

தீயில் சிக்குண்டவர்களுடன் தொலைபேசி தொடர்புகளை மேற்கொண்டு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இராணுவத்தினரும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும் பிரதேச செயலக அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்