சம்பூர் கடற்பரப்பில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

சம்பூர் கடற்பரப்பில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

சம்பூர் கடற்பரப்பில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2018 | 4:56 pm

Colombo (News 1st)  திருகோணமலை – சம்பூர் கடற்பரப்பில் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 21 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

5 கிலோ 550 கிராம் நிறையுடைய போதைப்பொருளே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எனினும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

சம்பூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்