லக்சதொச முன்னாள் தலைவர் வௌிநாடு செல்ல அனுமதி

லக் சதொச நிறுவன முன்னாள் தலைவர் வௌிநாடு செல்ல அனுமதி

by Staff Writer 12-07-2018 | 3:49 PM
Colombo (News 1st)  லக் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜித் பெர்னாண்டோ இம்மாதம் 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வௌிநாட்டிற்கு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அனுமதி வழங்கியுள்ளார். நீதிமன்ற பொறுப்பிலுள்ள அவருடைய வௌிநாட்டு கடவுச்சீட்டை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்ளவுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசீலித்த பின்னர் நீதவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். லக் சதொச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான கரம் மற்றும் விளையாட்டு உபகரணங்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் நலின் ருவன்ஜித் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.