விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2018 | 5:49 am

Colombo (News 1st) இன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்