புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Jul, 2018 | 7:40 am

Colombo (News 1st) 

உள்நாட்டுச் செய்திகள் 

01. போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைச்சாலையில் மரணதண்டனை அனுபவித்துவரும் நிலையிலும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடும் கைதிகளுக்கு எதிர்காலத்தில் தூக்குத்தண்டனை விதிப்பதற்கான நடைமுறையில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

02. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 13.5 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காக அரச வங்கிகள் இரண்டிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

03. யாழ். சுழிபுரத்தில் சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

04. இலங்கை மீனவர்கள் 6 பேருடன் பயணித்த படகொன்று காஸா – மாலைதீவு சர்வதேச கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கும் கடற்றொழில் திணைக்களம், அமெரிக்க விமானம் ஒன்றே இந்தப் படகைக் கண்டுபிடித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

05. எரிபொருளின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை பொதுப்போக்குவரத்து சேவைக்கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் உருவாகியுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. பிரான்ஸ் தலைநகர் பிரசல்ஸில் நேற்று ஆரம்பித்த கூட்டணி தொடர்பான 2 நாள் உச்சிமாநாட்டுக்கு, இராணுவக் கூட்டணிகளின் தலைவர்களை நேட்டோ செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் வரவேற்றுள்ளார். கூட்டணி தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சையின் மத்தியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

02. சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து தாஜ்மஹாலை மீட்டெடுங்கள் அல்லது இடித்துத்தள்ளுங்கள் என இந்திய உயர்நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

01. வரலாற்றில் முதல்தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.

02. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக அத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்