ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்போரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்போரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்போரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

எழுத்தாளர் Bella Dalima

12 Jul, 2018 | 9:15 pm

Colombo (News 1st)  ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், ஶ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்போரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்த, சாட்சியமளிக்கவுள்ள அனைவரும் ஆணைக்குழுவின் சட்டத்திற்கும் பாதுகாப்பிற்கும் கீழ் அடங்குவதாக ஆணைக்குழுவில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சாட்சியாளர்களுக்கு ஏதேனுமொரு வகையில் பாதிப்பு ஏற்படுமாயின், அவர்கள் அதுகுறித்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் ஆணைக்குழு சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டது.

2011ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட சில பிரதான நிலையங்களில் அறிவித்தல்களைக் காட்சிப்படுத்துவதற்காக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், குமார் ஸ்டிக்கர்ஸ் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டமை இன்று ஆணைக்குழுவில் வௌிக்கொணரப்பட்டது.

எனினும், அந்த கொடுக்கல் வாங்கல்களுக்கான ஒப்பந்தம் மாத்திரம் கண்டறியப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள் கண்டறியப்படவில்லை எனவும், இன்று சாட்சியமளித்த ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு ஆவணங்கள் காணப்படாமையை முறைகேடாகக் கருதவேண்டியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்