காலி தலைமையக தபால் நிலைய மேற்பார்வை அதிகாரியின் அறையிலிருந்து தபால் மூட்டை மீட்பு

காலி தலைமையக தபால் நிலைய மேற்பார்வை அதிகாரியின் அறையிலிருந்து தபால் மூட்டை மீட்பு

காலி தலைமையக தபால் நிலைய மேற்பார்வை அதிகாரியின் அறையிலிருந்து தபால் மூட்டை மீட்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2018 | 2:42 pm

Colombo (News 1st) காலி தலைமையக தபால் நிலையத்தின் மேற்பார்வை அதிகாரியின் அறையிலிருந்து தபால் மூட்டையொன்று மீட்கப்பட்டுள்ளது.

தென் மாகாண பிரதி தபால் மா அதிபர் மற்றும் காலி மாவட்ட தபால் அத்தியட்சகர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த தபால் மூட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒழித்து வைக்கப்பட்டிருந்த குறித்த தபால் மூட்டையில் ஆயிரக்கணக்கான கடிதங்கள் காணப்பட்டுள்ளதுடன், அவை வௌிநாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள உறவினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வௌிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பொதிகள் மற்றும் கடித உறைகளை சட்டவிரோதமாகப் பிரித்து அவற்றில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சிலர் கையகப்படுத்திக்கொள்வதாக தபால் திணைக்களத்திற்கு கிடைத்த அநாமதேய கடிதத்தின் ஊடாக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்