போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2018 | 3:56 pm

Colombo (News 1st)  போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற நேற்று (10) அமைச்சரவை அனுமதியளித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரிய போதைப்பொருள் வர்த்தகர்கள் 19 பேருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பினை பெறுவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்