சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள் அறுவரை மீட்க நடவடிக்கை

சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள் அறுவரை மீட்க நடவடிக்கை

சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள் அறுவரை மீட்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2018 | 4:11 pm

Colombo (News 1st)  இலங்கை மீனவர்கள் 6 பேருடன் பயணித்த படகொன்று சர்வதேச கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காசா – மாலைத்தீவு சர்வதேச கடற்பரப்பில் இந்த படகு தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.டி.பி. திசேரா தெரிவித்தார்.

அமெரிக்காவின் விமானம் ஒன்றே இந்த படகைக் கண்டுபிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் 20 அம் திகதி குறித்த படகு பயணத்தை ஆரம்பித்திருந்தது.

படகில் உள்ளவர்களை மீட்பதற்காக மீனவர் குழுவொன்று குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.டி.பி. திசேரா மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்