இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நீடிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நீடிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2018 | 3:33 pm

Colombo (News 1st)  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதி என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இராணுவத்தளபதி பதவியில் இருந்து மகேஷ் சேனாநாயக்க ஓய்வுபெறவிருந்ததாக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் 22 ஆவது இராணுவத் தளபதியாக 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி மகேஷ் சேனாநாயக்க பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்