இராஜாங்க அமைச்சர்கள் இருவர் நியமனம்

பிரதி அமைச்சர்கள் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக நியமனம்

by Staff Writer 10-07-2018 | 3:44 PM
Colombo (News 1st)  ஜே.சி.அலவத்துவல மற்றும் லக்கி ஜயவர்தன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதி அமைச்சர்களாக இதுவரை செயற்பட்டனர். ஜே.சி.அலவத்துவல உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக செயற்பட்டதுடன், தற்போது குறித்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.