சொந்தக்குரலில் பாடிய சூர்யா, கார்த்தி

பார்ட்டிக்காக சொந்தக்குரலில் பாடிய சூர்யா, கார்த்தி

by Bella Dalima 10-07-2018 | 4:54 PM
‘பார்ட்டி’ படத்திற்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடியிருக்கின்றார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம், ‘பார்ட்டி.’ இந்த படத்திற்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். பார்ட்டி படம் ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக பார்ட்டி மாறியிருக்கிறது.