எத்தியோப்பியா - எரித்திரியா இடையேயான போர் முடிவு

எத்தியோப்பியா - எரித்திரியா இடையேயான போர் முடிவு

by Chandrasekaram Chandravadani 10-07-2018 | 9:44 AM
எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய நாட்டுத் தலைவர்கள் அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ள அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிலைமை முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 1998 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான எல்லை முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த சமாதான உடன்படிக்கை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. அத்தோடு, போர் தொடங்கியதிலிருந்து அயல் நாடுகளிடையே பதற்றம் காணப்பட்டது. அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியான உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. எல்லை முரண்பாட்டின் பின்னர் இரண்டாகப் பிரிந்த உறவுகளுக்கு தற்போது முதல்தடவையாக தொலைபேசி வாயிலாகத் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது. எரித்திரிய தலைநகர் அஸ்மராவில் நடைபெற்ற இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர், இது அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தசாப்த காலத்தின் பின்னரான எரித்திரிய ஜனாதிபதி இசையாஸ் அவெவேர்கிக்கும் (Isaias Afewerki) எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மட்கும் (Abiy Ahmed) இடையிலான சந்திப்பு ஒரு பதிவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.