நவோதயா கிருஷ்ணா  - துப்பாக்கிச்சூட்டில் பலி !

துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் பலி

by Staff Writer 09-07-2018 | 8:50 AM
Colombo (News 1st) கொழும்பு - செட்டியார்தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார். இன்று காலை 7.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8 மணியுடன் ஆரம்பமான 24 மணியாலத்தில் பதிவான 5 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும். கொழும்பு - செட்டியார் தெரு ஆந்திவாள் வீதியில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்னா என அழைக்கப்படும் கிருஷ்னபிள்ளை கிருபானந்தன் இன்று காலை 7.45 அளவில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானார். காலஞ் சென்ற மாநக சபையி்ன் முன்னாள் உறுப்பினர் வேலணை வேணியனின் மரண சடங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் காலை வேளையில் தமது வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்தார் அவ்வேளையில் மோட்டார் சைகக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தி வி்ட்டு தப்பி சென்றுள்ளதுடன் சம்பவத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்னபிள்ளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட பினனர் உயிரிழந்துள்ளார் 40 வயதான கிருஷ்னபிள்ளை கிருபானந்தன் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நரோதய மக்கள் முன்னணி எனும் சுயாதீன குழு சார்பில் போட்டியிட்டார் தேர்தல் முடிவுகளின் படி இந்த சுயேட்சை குழுவிற்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தவுடன் அதில் ஒரு ஆசனம் கிருஷ்னபிள்ளைக்கும் மற்றைய ஆசனம் சுமீர பீரிஸுக்கும் கிடைத்தது சுமீர பீரிஸ் என்பவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் குடுலால் எனப்படும் லால் பீரிஸின் மூத்த சகோதரர் ஆவார். சுமீர பீரிஸின் இரட்டை சகோதரரரான சமீர பீரிஸும் இம் முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டதுடன் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை இதே ​வேளை செட்டியார் தெருவில் இருந்து 800 மீற்றர் தூரத்தில் உள்ள ஜம்பட்டா வீிதியின் 131 ஆவது தோட்டத்திதல் நேற்று இரவு மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றது நேற்றிரவு 8.15 அளவில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 50 வயதான எலிசபத் பெரேரா என்ற பெண்ணும் அவரது கணவரான 58 வயதான செல்லையா செல்வராஜ் மற்றும் மேலும் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர் இதன் போது குறித்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதுள்ளனர் இவர்கள்இருவரும் உணவகம் ஒன்றை நடாத்தி சென்றுள்ளனர் கடந்த ஜூன் 17 ஆம் திகதியும் 131 ஆவது தோட்டத்தில் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதுடன் கறுப்பையா பழனி கணேஷ் என்பவர் பலத்த காயமடைந்தார் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த தம்பதியினர் கணேஷ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் சம்பவத்தை நேரில் கண்டுள்ளதுடன் அது தொடர்பிலான சாட்சியம் வழங்கும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கு இடையில கருத்து முரண்பாடு இடம் பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் கணேஷ் என்பவரின் மனைவி மூன்று மாதங்களுக்கு முன்ன் கொலை செய்யப்பட்டிருந்தார் இதேவேளை, கிரிபத்கொடை - நாஹேன பிரதேசத்தில் குறுக்கு வீதி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த முச்சககர வண்டி ஒன்றில் இருந்து கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்படடுள்ளது மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹுனுப்பிட்டி பகுதியை சேர்ந்த தனுஸ்க தரங்க குணர்தன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முகங்க​ளைே மூடிய மூவர் மனைவி மற்றும் பிள்ளைகளை அச்சுறுத்தி தந்தையை கொலை செய்துள்ளார் பின்னர் அவரின் சடலத்தை அவரது முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள குறுக்கு வீதி ஒன்றில் விடடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதே ​வேளை ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் கெசல் கமுவ ஓயாவிற்கு குறுக்காக செல்லும் கால்வாய் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது