அன்றும் , இன்றும் சிங்கப்பூர்  - பிரதமர் ரணில்!

அன்றும் , இன்றும் சிங்கப்பூர் - பிரதமர் ரணில்!

by Staff Writer 09-07-2018 | 9:53 PM
"1965 ஆம் ஆண்டு நான் பாடசாலை செல்லும் காலத்தில் சென்ற புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் காட்சியளித்த சிங்கப்பூருக்கும் இன்று காட்சியளிக்கும் சிங்கப்பூருக்குமிடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அன்று மக்கள் சேரி வீடுகளில் வாழ்ந்தனர். 50 வருடங்களின் பின்னர் ஆசியாவில் உயர்நிலைக்கு சிங்கப்பூர் மாறியுள்ளது " என பிரதமர் தெரிவித்துள்ளார் . விழிப்புணர்வு, சர்வதேச நீர் வாரம் மற்றும் சுத்தமான சூழல் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தினார். அதன் போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் சேன்டிஸ் எக்ஸ்போ மத்திய நிலையத்தில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில் 135 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். சிங்கப்பூரின் பிரதி பிரதமர் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் தேமன் சண்முகரத்னம் ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநாட்டின் தலைவர் டொமி கோ உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர். எதிர்கால மக்கள் வாழ்வு மற்றும் நிலையான நகரம் மனித செயற்பாடுகளால் ஏற்படும் சவால்கள் எனும் தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு உரையாற்றினார்.