​போரிஸ் ஜோன்ஸன் இராஜினாமா !

​போரிஸ் ஜோன்ஸன் இராஜினாமா !

​போரிஸ் ஜோன்ஸன் இராஜினாமா !

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2018 | 10:30 pm

பிரித்தானியாவின் வௌியுறவுச் செயலாளர் போரிஸ் ஜோன்ஸன் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுவது தொடர்பான பிரதமர் தெரேசா மே இன் புதிய திட்டங்கள் அடங்கிய பாராளுமன்ற உரையையடுத்தே, அவர் இராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுவதற்கு சிரேஸ்ட செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தி வருகின்றனர்.

இன்று Brexit செயலாளர் David Davis பதவி விலகிய சில மணித்தியாலங்களில் இடம்பெறும் நான்காவது பதவி விலகல் இதுவாகும்.

கனிஸ்ட Brexit அமைச்சர்களான ஸ்டீவ் பேகர்  மற்றும் சுவெல்லா பிரேவமர்ன் ஆகியோர் இவர்  பதவி விலகிய குறுகிய நேரத்தில் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இதேவேளை, David Davis இன் பதவி விலகலால் வெற்றிடமாகியுள்ள Brexit செயலாளர் பதவிக்கு முன்னாள் வீடமைப்பு அமைச்சர் டொமினிக் ராாப் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரித்தானியாவின் வௌியுறவுச் செயலாளர் பதவிக்கும் உடனடியாக ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்