பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை : அவரது கணவர் கைது

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை : அவரது கணவர் கைது

பாடகி ப்ரியானி ஜயசிங்க கொலை : அவரது கணவர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2018 | 6:17 am

Colombo (News 1st) பாடகி ப்ரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை கடற்கரைப் பகுதியிலிருந்து இன்று காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 8.45 அளவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்ததன் பின்னர் சந்தேகநபரான பாடகியின் கணவர் தலைமறைவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சில காலமாக இருவருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பாணந்துறை குடாஅருக்கொட பகுதியில் வசிக்கும் ப்ரியானி ஜயசிங்க, இரண்டு குழந்தைகளின் தாயாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்