கிரிபத்கொடவில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

கிரிபத்கொடவில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

கிரிபத்கொடவில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2018 | 11:44 am

Colombo (News 1st) கிரிபத்கொட – நாஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் நாஹேனவத்த, ஹூனுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 3 மணியளவில் குறித்த நபர், அவரது வீட்டில் வைத்து இருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சடலம், கொல்லப்பட்டவரின் முச்சக்கரவண்டியிலே கொண்டுசெல்லப்பட்டு அருகிலுள்ள வீதியொன்றில் போடப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்