121 பெண் கைதிகள் இடமாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 121 பெண் கைதிகள் இடமாற்றம்

by Staff Writer 07-07-2018 | 6:17 PM
Colombo (News 1st)  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 121 பெண் கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் 521 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அங்கு 160 கைதிகளை மாத்திரமே தங்கவைக்க முடியும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட பெண் கைதிகள் இன்று மாலை தமது சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டதாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஏ.டப்ளியூ.எஸ்.தம்மிக்க தெரிவித்தார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இதுவரையில் 28 பெண் கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதிகளை மாற்றுவது தொடர்பில் அவர்களின் உறவினர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.