50 பேரைத் தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்கள்

பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரில் 50 பேரைத் தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்கள்: மனோ கணேசன்

by Bella Dalima 07-07-2018 | 10:04 PM
Colombo (News 1st)  பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரில் 50 பேரைத் தவிர ஏனையவர்கள் அங்கிருக்கத் தகுதியற்றவர்கள் எனவும் அவர்களிடம் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பைக் கொடுக்க வேண்டாம் எனவும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதிகள் உள்ள பலர் பாராளுமன்றத்திற்கு வௌியில் இருப்பதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். தேர்தல் முறையினூடாக வாக்குகளைப் பெற்று, அடிபிடியில் ஈடுபட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல விருப்பமில்லாததால், தகுதியிருந்தும் பலர் வௌியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். பாணந்துறை ஶ்ரீ சுமங்கல மகளிர் கல்லூரியில் நேற்று (06) நடைபெற்ற தமிழ் மொழி தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.