டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 07-07-2018 | 10:36 AM
Colombo (News 1st) பருவப் பெயர்ச்சி மழையுடன் கூடிய வானிலையால், 7 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கூறியுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 25,827 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் மட்டும் 4,485 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.