ஒரு நாளைக்கு 1 மில்லியன் கணக்குகள் முடக்கம்

ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

by Chandrasekaram Chandravadani 07-07-2018 | 1:45 PM
தவறான தகவல்களைப் பின்தொடர்வதைத் தவிர்ப்பதற்காக அண்மைய மாதங்களில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்காவின் சட்ட வல்லுநர்கள் மற்றும் சர்வதேச கட்டுப்பாட்டாளர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. பாவனையாளர்களது கணக்குகளை இல்லாதாக்குதல், புதியவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் இதுபோன்றவற்றைத் தவிர்ப்பதற்காக அவர்களது உள்ளடக்கங்களை அவதானித்தல் போன்ற விடயங்களில் குறித்த நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனடிப்படையில், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 70 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளதுடன், குறித்த நடவடிக்கை இந்த மாதமும் தொடர்வதாக 'வொஷிங்டன் போஸ்ட்' மேலும் தெரிவித்துள்ளது.