அஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா

அஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா

அஜித்துடன் மீண்டும் நடிக்கும் அனிகா

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2018 | 4:43 pm

​அஜித் – சிவா மீண்டும் இணையும் படம் – விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் வெளியீட்டுத் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சிவா.
அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.

தற்போது அனிகா, அஜித்துடன் விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் என்னை அறிந்தால். படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார் அனிகா. அந்தப் படத்தைத் தொடர்ந்து நானும் ரெளடி தான், மிருதன் ஆகிய படங்களில் நடித்தார்.

அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் வெளியான ‘மா’ எனும் குறும்படத்தில் நடித்து பரவலாகக் கவனம் பெற்றார்.

இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விசுவாசம் படத்தில் அஜித்துடன் மீண்டும் அனிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்